ஜோலார்பேட்டை அடுத்த ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பெரிய மோட்டூர் ஊராட்சி பூனை குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணியவில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தற்காலிக கணினி பெண் ஆசிரியை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்கள். அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து 15 நாள் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
இத்தகவலை அறிந்த பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தற்காலிக பணி நிறை இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments