Breaking News

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த சிறுவர்களின் குடும்பத்தார்களிடம் ரூ.2லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார்.


வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்திருவோ கூட்டத்தில் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களின் குடும்பத்தாரிடம் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய்  1 இலட்சம் வீதம் 2 இலட்சத்திற்கான பற்று (காசோலை) வைப்புக்கான ஆணையினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தனித்துறை ஆட்சியர் கலியபெருமாள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் 

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!