தவெக முதல் மாநில மாநாடு: தூத்துக்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனத்தில் தொண்டர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி டூவிபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். சுபாகர் வரவேற்றார். இதில், தவெக ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வழிகாட்டுதலின் படியும், பொதுச்செயலாளர் ஆனந்தன் ஆலோசனையின் படியும், விக்கிரவாண்டியில் நடைபெறும் முதல் மாநில மாநாட்டிற்கு தூத்துக்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செல்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், சுதாகர், சம்பத்குமார், புஷ்பலதா, நெல்லை மகளிரணி கேத்ரின் பாண்டியன் உள்ளிட்ட தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.
No comments