தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தார் சாலை, பேவர் பிளாக் சாலை, பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகர், தேவர்காலனி, வி.எம்.எஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாநகர துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கீதாமுருகேசன், திமுக வட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார், போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்கள்.
No comments