Breaking News

உளுந்தூர்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது இந்த பேரணியை முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


 ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது ராமகிருஷ்ணா பள்ளி விருதாச்சலம் சாலை பேருந்து நிலையம் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது இதில் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் சுமார் 300க்கும்மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றனர் தொடர்ந்து மணிக்கூண்டு திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக் குமார் சோடியா  தலைமை தாங்கினார், சைவ சித்தாந்த பேரவை அமைப்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை வைத்தார், ஆர்.எஸ்.எஸ் மாநில சேவைத்துறை இணைப்பொறுப்பாளர் இராஜராஜன்  சிறப்புரையாற்றினார்.இந்த பேரணியையொட்டி அந்தப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments

Copying is disabled on this page!