மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர் இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 47 மனுக்கள் வேலை வாய்ப்பு கோரி 35 மனுக்கள் முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 45 மனுக்கள் புகார் தொடர்பான மனுக்கள் என கூட்டத்தில் மொத்தம் 309 மனுக்கள் வழங்கப்பட்டது மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார் மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் கூட்டுறவு துறையின் நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் நான்கு நபர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் கீதா மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் ராஜேந்திரன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி மாவட்ட வழங்கல் அலுவலர் பானு கோபன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments