பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கழனிவாசல் கிராமத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையின் சார்பில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது முகாமில் குத்தாலம் குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சுந்தரம் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் முகவரி மாற்றம் செல்போன் எண் திருத்தம் புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக் கொண்டார் சில மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் அதன் பெயரில் குத்தாலம் வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது கழனிவாசலில் நடைபெற்ற முகாமில் முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் பரமானந்தன் கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர் கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
No comments