மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் பல்வேறு சமூக ஜனநாயக இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் சாதிவாரியான கணக்கெடுப்பை உடனே நடத்திட வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசிடம் கொடுக்காமல் மாநில அரசு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் பல்வேறு சமூக ஜனநாயக இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பினை ஜாதி வாரியான கணக்கெடுப்பாக நடத்திட வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பினை மாநில அரசு நடத்தாமல் திட்டமிட்டு மத்திய அரசிடம் தள்ளிவிடாதே, சமூக நீதியை கல்வியை மற்றும் வேலைவாய்ப்பில் நிலை நிறுத்திட ஜாதி வாரி கணக்கெடுப்பை போர்க்கால அடிப்படையில் நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புதுச்சேரி சாரத்தில் உள்ள திட்டம் மற்றும் புள்ளியியல் ஆராய்ச்சி துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். இதில் திராவிட விடுதலைக் கழகம், தமிழர் களம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிட கழகம், தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு சமூக, ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments