புதுச்சேரியில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு கையகப்படுத்தினா்.
புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட மகாத்மா காந்தி சாலையில் அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரா் தேவஸ்தான திருக்கோயில் உள்ளது.
கோயிலுக்கு சொந்தமான இடம், புதுச்சேரி நகரில் வாா்டு சி மற்றும் பிளாக் 15 இடத்தில் உள்ளது. அந்த இடம் ஈஸ்வர தா்மராஜா கோயில் தற்காலிக அறங்காவலா் எனும் பெயரில் பதியப்பட்டுள்ள மனையுடன் கூடிய வீடாகும். இங்கு ஒரு சிலர் வாடகைக்கு இருப்பதாக கூறி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு நபர்களை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான, பட்டா எண்: 211, கொண்ட 1.56 ஆர் அளவுள்ள இடம், ஈஸ்வர தர்மராஜா கோவில் தற்காலிக அறங்காவலர் என்ற பெயரில் பதியப்பட்ட மனையுடன் கூடிய வீடு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி அரசு வழிகாட்டுதல்படி, நேற்று கோவில் நிர்வாகத்தால் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கையப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
No comments