சங்கரதாஸ் ஸ்வாமிகள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில்,6வது நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான உபயதாரர் பூபாலன் தனது குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments