மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள DMI வளாகத்தில் NEEDS Network தமிழ்நாடு, பாண்டிச்சேரி, வலைப்பின்னல் மூலம் கிழக்கு மண்டல ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.
அதில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் இருந்து தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் 25க்கு மேற்ப்பட்ட நபர்கள் கலந்துக்கொண்டார்கள். மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சேகர் தலைமையில், நாகை மாவட்ட அமைப்பாளர் அருட்சகோதரி பிலோமினா DMI முன்னிலையில் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாநில கன்வினர் முனைவர் மகாகிருஷ்ணன் காலநிலை மாற்றத்தைப் பற்றி விளக்க உரை ஆற்றினார். ஐந்து குழுக்களாகப் பிரிந்து குழுவிவாதம் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. கூட்ட இறுதியில் பேராசிரியர் முனைவர் ஜெகதீஸ்வரி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் நன்றி கூறினார்.
No comments