மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் மயிலாடுதுறையை ஒட்டியுள்ள மன்னம்பந்தல் ஊராட்சியை இணைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மன்னம்பந்தல் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நகராட்சியுன் ஊராட்சி இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி மன்னம்பந்தல் வனிகர்கள் கடையடைப்பு போராட்டம் செய்தனர். இந்நிலையில் இன்று மன்னம்பந்தல் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவைப் பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிராம மக்களை சந்தித்து மாலை 5 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
No comments