Breaking News

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 100கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

 


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் 100கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் பாவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும், தனி கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

No comments

Copying is disabled on this page!