ஊசுடு தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தேசத் தலைவர்களின் பெயர் பலகையினை அமைச்சர் சரவணக்குமார் திறந்து வைத்தார்
ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு பல ஆண்டு காலமாக எவ்வித பெயருமின்றி இருந்து வந்த நிலையில் அமைச்சர் சரவணன் குமார் முயற்சியில் தேசிய தலைவர்களின் பெயர் சூட்டி அதன் பெயர் பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சரவணன்குமார் கலந்துகொண்டு பெயர் பலகையினை திறந்து வைத்தார். இதில் கரசூரில் உள்ள பகத்சிங் அரசு தொடக்கப்பள்ளி,துத்திப்பட்டில் உள்ள திருப்பூர் குமரன் அரசு தொடக்கப்பள்ளி,
சேந்தநத்தம் பகுதியில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு தொடக்கப்பள்ளி,அரசூரில் உள்ள APJ அப்துல்கலாம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பெயர் பலகையினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,தொகுதி பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments