காரைக்கால் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட். அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழு காரைக்காலில் தயார் நிலை.
காரைக்கால் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததோடு காரைக்கால் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில்.
கனமழை எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அரக்கோணத்தில் இருந்து குழு கம்மாண்டர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு காரைக்கால் வந்துள்ளது. காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து மீட்பு நடவடிக்கைகள் மீட்பு கருவிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் "கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்த சில நிமிடங்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுத்தமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் குழுவினர்களுக்கு அறிவுறுத்தினார்".
No comments