இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற 3ஆம் ஆண்டு அவசர மருத்துவ சங்க மாநில மாநாட்டை சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்பி ரமேஷ் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டு அவசர மருத்துவ சங்க மாநாடு துவக்க விழா இன்று நடைபெற்றது.
புதுச்சேரி சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குனர் டாக்டர் செவ்வேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்பி ரமேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், அவசர மருத்துவ நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த துறையில் தொடர்ந்து கல்வி மற்றும் ஒத்துழைப்பின் தேவை குறித்தும் எடுத்துரைத்தனர். அவசர மருத்துவ நடைமுறைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றங்கள் பற்றிய தலைப்புகளுடன் மாநாடு தொடங்கியது.
இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அவசர மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் சுரேந்தர் செய்திருந்தார்.
No comments