Breaking News

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனாதையாக கைவிடப்பட்ட குழந்தைகளோடு மயிலாடுதுறை எம்எல்ஏ வெடி வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடினார்.

 


மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் பலர் ஏற்பாட்டில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் வெடி வெடித்து , நடனமாடி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் , எம்எல்ஏ ராஜ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு :-

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அன்பகம் காப்பகம் அமைந்துள்ளது. தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலர் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டார். மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மத்தாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் அதனை வெடித்து தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!