சீர்காழி அடுத்த பூம்புகார் சுற்றுலா வளாகத்திற்கு வந்த கப்பற்படை வீரர்களை வரவேற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி....
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகத்திற்கு இந்திய கப்பற்படை பிரிவான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை வீரர்கள் கடலோர பாரம்பரிய கடல்சார் வரலாற்றை பார்வையிட வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி பார்வையிட்டு, தொடர் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்திய கடற்படையின் பிரிவான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமையகத்தை சேர்ந்த 15 கடற்படை வீரர்கள்; 5 வாகனங்களில் தமிழகத்தின் கடலோர பாரம்பரிய தளங்களை பறைசாற்றும் விதமாக நேற்று புதுச்சேரியில் தொடங்கி இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட திட்டமிடப்பட்டு இரண்டாம் நாளாக இன்று பூம்புகார் வந்தடைந்தனர். இக்கடற்படை வீரர்கள் அந்தந்த பகுதிகளில் அருகாமையில் உள்ள கல்லூரிகளில் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் அதன் வரலாற்றுகளை எடுத்துக் கூறுவார்கள்.
இன்று பண்டைய தமிழ்நாட்டின் கடற்கரை துறைமுகமாக விளங்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் நகரத்தில் இந்திய கடற்படை வீரர்களை பாரம்பரிய நடையில் இங்குள்ள அனைத்து பழங்கால முக்கியத்துவங்களையும் பார்வையிட்டனர். மேலும், இத்தலத்தை தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ரூ.23.60 கோடி மதிப்பீட்டில்; சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், இந்திய கடற்படை அதிகாரி தினே தசரதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜ கஜேந்திரகுமார், சீர்காழி வட்டாட்சியர் திருமதி.அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments