சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் பாதயாத்திரை...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் பாதயாத்திரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைதி பாதயாத்திரை கொள்ளிடம் அருகே மயிலுக்கோயில் கிராமத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து துவங்கியது. பாதயாத்திரையை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் தலைமையேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை துவக்கி வைத்து பேசினார். கொள்ளிடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன்,வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம்,பாலசுப்ரமணியன், ரவி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரை மயிலக் கோயிலிலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக வந்து கொள்ளிடம் பஸ் நிலையத்தை வந்தடைந்து நிறைவு பெற்றது.
No comments