Breaking News

வேலூர் மாவட்டத்தில் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன்


வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமும் சைபர் செல் பிரிவும் இயங்கி வருகின்றது பொது மக்களிடம் இருந்து பெறப்படும் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் பெறப்படுகின்றது, அந்தந்த காவல் நிலையங்கள் மூலமாக இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது மேலும் அதற்காகவே இயங்கி வரும் CEIR portal (Central Equipment identity Resister ) என்ற வலைத்தளத்தின் வாயிலாக செல்போன்கள் குறித்த இருப்பிட தகவல்கள் பெறப்பட்டு அதனைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளது. 

Cell tracker எனப்படும் வாட்ஸ் அப் உதவி என் வழங்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு செல்போன்களின் இருப்பிடங்களை கண்டறிந்தும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, மேற்கண்ட இந்த இரண்டு முறைகளின் இதுவரை சுமார் ரூபாய் 2.54.92.400/- ( இரண்டு கோடியே ஐயம்பத்து நான்கு லட்சத்து தொன்னூற்று இரண்டாயிரத்து நூறு ) மதிப்புடைய 1.324 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நா. மதிவாணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி எட்டாம் கட்டமாக மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் பெறப்பட்ட 612 புகார்களில் CELL TRACKER மூலம் சுமார் ரூபாய் 17.50.000/- (பதினேழு ஒரு லட்சத்து ஐயம்பதாயிரம்) மதிப்புடைய 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும்  CEIR PORT மூலம் சுமார் ரூபாய் 20.50.000/-(இருபது இலட்சத்து ஐயம்பதாயிரம் மதிப்புடைய 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தமாக ரூபாய் 38.00.000/-(முப்பத்தெட்டு லட்சம் மதிப்புடைய 200 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நேரில் வரவழைக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதுவரை மொத்தமாக சுமார் ரூபாய் 2,92,92,400/- (இரண்டு கோடியே தென்னூற்றிரண்டாயிரத்து நானூறு) மதிப்புள்ள 1.524 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களும் ஒப்படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!