பாஸ்கான் மெர்காடோ நிறுவனத்தின் சார்பில் சிறுதானிய நொறுவை, சிற்றுண்டிக்கான ‘நியூட்ரா’ பிராண்ட் அறிமுகம் விழா சென்னையில் நடைபெற்றது!
பாஸ்கான் மெர்காடோ நிறுவனம் 29 வகையான சிறுதானிய உணவு பொருட்களை நியூட்ரா என்கின்ற பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்துகிறது. இதற்கான அறிமுக விழா சென்னை அண்ணாசாலை எக்ஸ்பிரஸ் அவென்யூ இ ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சௌபாக்கியா வெட்கிரைண்டர் நிர்வாக இயக்குனர் வி.வரதராஜன், நேசம் மற்றும் ஸ்ரீ நேஷா குழும தலைவர் டாக்டர் சி.செந்தில்குமார், சென்னை எம்.எஸ்.எம்.இ. துறை பி.எம்.எப்.எம்.இ. திட்டத்தின் மாநில முன்னணி திட்ட மேலாளர் நந்தகுமார், ப்ரூட்யூன்ஸ் யுனிகோ அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் சிஇஓ பிரதாப் செல்வன், ஆயுஷ் மருத்துவமனை தலைமை இயற்கை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ராஜேஸ்வரி, கலைச்செல்வி மீடியா ஹவுஸ் நிறுவனர் ராஜவேல் ஆகியோர் பங்கேற்று- புதிய வகையான 29 சிறுதானிய உணவு பொருட்களை அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர்கள் ஜெகன் ராஜ், சம்பூரணி, வள்ளி சங்கரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை சேரன் ஒருங்கிணைத்தார். இதில், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் மற்றும் பாஸ்கான் மெர்காடோ நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments