நாட்றம்பள்ளியில் ரூ22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா நாயனசெருவு ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் ரூ 22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி தேசிங்குராஜா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். உடன் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் பாபு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி ஒன்றிய குழு துணை தலைவர் தேவராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments