Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி, உளுந்து மற்றும் பச்சை பயறு  ஆகியவற்றிக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்  ஏ.பி.மகாபாரதி  தகவல்.


   மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு சம்பா சாகுபடியின்போது 68489 எக்டர் சாகுபடி செய்யப்பட்டு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 69807 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். விவசாயிகளால் செலுத்தப்பட்ட பிரீமியத் தொகை ரூ. 9,40,76,960 ஆகும். இதில் முதற்கட்டமாக 16 கிராமங்களுக்கு 4950.87 எக்டருக்கு ரூ. 5.98 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டாவது மற்றும் இறுதி கட்டமாக  245 கிராமங்களுக்கு உளுந்து பயிருக்கு 14201.04887 எக்டருக்கு ரூ. 6.4122188 கோடி இழப்பீட்டு தொகையாகவும், பச்சை பயறுக்கு 208 கிராமங்களுக்கு 12702.27333 எக்டருக்கு ரூ. 4.3678264 கோடி இழப்பீட்டு தொகையாகவும் நெல்க்கு 10 கிராமங்களுக்கு 3907.0203 எக்டருக்கு ரூ. 4.8303937 கோடி இழப்பீடு தொகையாகவும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆக கூடுதலாக முதல் மற்றும் இறுதி கட்டமாக. 35761.2125 எக்டருக்கு ரூ.21.598 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் காப்பீடு நிறுவனத்தால் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 35.94 கோடியும் 2022-23 ஆம் ஆண்டில் 119.10 கோடியும் இழப்பீடு தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விதைப்பு இழப்பு  என்பது அந்த கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த பரப்பில் 75 சதவீத பரப்பு நடவு செய்யப்படாமலோ (அல்லது) விதைக்கப்படாமலோ இருந்தால் அவை அறிவிக்கை செய்திருந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நமது மாவட்டத்தில் அம்மாதிரியான சூழல் எழவில்லை. மத்திய மற்றும் மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் வேளாண்மைதுறை, புள்ளியியல் துறை, பயிர் காப்பீடு நிறுவனம் அரசின் வழிகாட்டுதலின்படி மட்டுமே பயிர் காப்பீடு வழங்குகிறது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!