காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில், விவசாயத்தின் மகத்துவத்தை விளக்கும் வகையாக நவராத்திரி கொலு அமைத்த தனியார் பள்ளி ஆசிரியர் :-
விவசாயத்தின் பெருமையை விளக்கும் வகையிலும், நீரின்றி அமையாது உலகு என்று தண்ணீரின் தேவையை உணர்த்தும் வகையிலும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் நவராத்திரி கொலு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பகுதியைச் சேர்ந்த கோபு, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பள்ளியில் பணியாற்றி வருகிறார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை தண்ணீரை சார்ந்து அமைந்துள்ளது என்பதை விளக்கும் வகையில் செயற்கையான நீர்வீழ்ச்சி உருவாக்கி அதனை மின்விளக்குகளால் அலங்கரித்துள்ளார். தொடர்ந்து விவசாயம் சார்ந்த பொம்மைகள், வயல்வெளி காடு இவற்றுடன் கடவுளர் பொம்மைகளை அமைத்து நவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் ஏராளமான பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
No comments