காரைக்காலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலை பட்டாசு விற்பனை மையத்தை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி கூட்டுறவுத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலிவு விலை பட்டாசு விற்பனை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு பட்டாசு விற்பனை மையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் இந்த மலிவு விலை தீபாவளி பட்டாசு விற்பனை மையத்தில் பல்வேறு வகையிலான புதிய ரக பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது மேலும் பட்டாசுகள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments