ஜோலார்பேட்டையில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு பொதுமக்கள் பள்ளியில் முற்றுகை!.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பெரிய மோட்டூர் ஊராட்சி பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 256 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த ஆண்டு சிறந்த பள்ளி விருது வழங்கி உள்ளனர். இப்பள்ளியில் மூன்று ஆண் ஆசிரியர்கள் ஐந்து பெண் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். நான்கு தற்காலிக ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில் இப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி கடந்த 12 வருடங்களாக இப்பணியில் பணியாற்றி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது இவர் நேற்று தற்காலிக கணினி பெண் ஆசிரியரை பாலியல் தொந்தரவு செய்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பெண் ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் ஊர் பொதுமக்களிடம் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு! வட்டார கல்வி அலுவலர் அசோக் குமார் காவல் ஆய்வாளர் நாகராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments