Breaking News

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா கொடியேற்றம்.


தூத்துக்குடி சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட விழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்தாண்டு ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் மற்றும் கொடி ஏற்றம் நடைபெற்றது. 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் இந்துசமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர்குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, செல்வசித்ரா அறிவழகன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, அறங்காவலர்குழு உறுப்பினர்கள் சாந்தி, ஜெயலெட்சுமி, மகேஸ்வரி, மந்திரமூர்த்தி, ஜெயபால், பாலகுருசாமி, மகாராஜன், மஞ்சுளா, மகேஸ்வரன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின்பு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் வரும் 27ம் தேதி பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. சங்கரராமேஸ்வரர் மற்றும் பாகம்பிரியாள் திருக்கல்யாண விழா வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்ட திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!