Breaking News

விபத்தில் கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் நான் பாதிக்கப்பட்டவன் என்ற உணர்வு இல்லாமல் முன்னேறினேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்று பெண்கள் யாரிடமும் கேட்காத நிலைக்கு தன்னம்பிக்கை வேண்டும் கணவனை இழந்த கைவிடப்பட்ட பெண்களுக்கான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன்னம்பிக்கை பேச்சு.

 


மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக விதவைகள் கைம்பெண்கள் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று நீண்ட உரையாற்றினார். சிறுவயதில் விபத்து ஒன்றில் ஒரு கையை இழந்தாலும் தொடர்ந்து படித்து மாவட்ட ஆட்சியர் வரை தான் உயர்ந்ததை சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர், விபத்தில் எனக்கு இழப்பு ஏற்பட்டாலும், நான் இழப்பு ஏற்பட்டதாக கருதாமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தேன். பெண்கள் கணவனால் கைவிடப்பட்டாலும், கணவன் இறந்தாலும் தன்னம்பிக்கையை விடாமல் கால சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்பட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம், நான் இழந்து விட்டேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்காத வகையில் மனதில் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் இயற்கை நமக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் அரசும் அதற்கு ஏற்ற பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது என்று நம்பிக்கை தரும் படி பேசியது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

No comments

Copying is disabled on this page!