நாட்றம்பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் புதுப்பேட்டை ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வழங்கும் பணியை பார்வையிட்டார் சந்தைமேடு பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை பார்வையிட்டு தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து நயனயத்தியூர் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது அப்போது மாவட்ட ஆட்சியர் மாணவர்களோடு அமர்ந்து உணவு உட்கொண்டார் திடீரென மாணவர்கள் இறை வணக்கம் பாடிய போது மாவட்ட ஆட்சியர் பூரிப்படைந்தார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments