புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், 2024ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் குலோத்தங்கள் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் ஒரு பகுதியாக, புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கினார்.
அதன்படி,தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுவை மாவட்டத்தில் (மாகி மற்றும் ஏனாம் பகுதிகள் உட்பட) 3 லட்சத்து 98 ஆயிரத்து 657 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 49 ஆயிரத்து 246 பெண் வாக்காளர்கள் மற்றும் 129 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை வாக்காளர் சேர்க்கையின் போது 24 ஆயிரத்து 484 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.17 ஆயிரத்து 786 வாக்காளர்கள் புதுதாக சேர்க்கப்பட்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்து 668 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
புதுவை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் வில்லியனுார் தொகுதியில் அதிகபட்சமாக 45 ஆயிரத்து 703 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் 24 ஆயிரத்து 552 வாக்காளர்களும் உள்ளனர்.
No comments