வெள்ள பாதிப்பு பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மீட்பு பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற கரூர் ஆயுதப்படை காவலர்கள்.
கரூர் மாவட்டதில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மீட்பு பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற கரூர் ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களையும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் இன்று (19.10.2024) கரூர் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் கரூர் மாவட்டத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
No comments