திருப்பத்தூரில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணித்து மாநில தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சற்குணம் கலந்து கொண்டு டிஜிட்டல் கிராப் சர்வே பணியின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பேசினார். இதில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments