திமுகவும், தொழிலாளர்களும் எனது இரு கண்கள்: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி.
இதில், தன்பாடு உப்பு தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து எனது தந்தை என்.பெரியசாமி 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தலைமை தாங்கி தொழிலாளர்கள் நலன் மட்டுமின்றி திமுகவின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றினார்.
ஓவ்வொரு ஆண்டும் உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்று கொடுத்தார். அவரது மறைவிற்கு பின்பு பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின்படி அப்பணியை தொடர்ந்து பொறுப்பேற்று செய்து வருகிறேன். மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தாங்கள் சிறுசிறுக சேமித்த பணத்தை சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் அவர்களுக்கு போனஸாக வழங்கினேன். திமுகவும், தொழிலாளர்களும் எனது இரு கண்களாக நினைத்து பணியாற்றி வருகிறேன் என மேயர் ஜெகன் பெரியசாமி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதில், சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments