காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டலத்தின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சிதளத்தில் மாநில அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி 26.09.2024 முதல் 28.09.2024 வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளாக நடைபெற்றது. மாநில அளவில் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மத்திய மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட காவல்துறை அணியினர் சிறப்பாக செயலாற்றி திரு. பாலமுருகன் தலைமை காவலர் 1 தங்கம் மற்றும் திரு. சிவசக்திகுமார், காவலர் 1 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளனர். திரு.பாலகிருஷ்ணன் தலைமை காவலர், திரு தர்மலிங்கம் தலைமை காவலர், திரு கார்த்தி, காவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் கரூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவல் ஆளிநர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
No comments