Breaking News

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார்

 



புதுச்சேரி அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குநரகம் சார்பில், லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் இருந்த மொசைக் தரையை ரூ. 1.05 கோடி செலவில் மரத்திலான தரையாக மாற்றி அமைக்கப்பட்டது.  மரத்திலான தரைதளம் மற்றும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது, 


விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர்  ரங்கசாமி கலந்து கொண்டு புதிய மரத்திலான தரை தளத்தினை திறந்து வைத்து தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!