உலக மனநல தினம்: தூத்துக்குடியில் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். உலக மனநல தினத்தை முன்னிட்டு சிருஷ்டி மனநல ஆலோசனை மையம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி உளவியல் துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். பேரணியில், ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அன்னம்மாள் மகளிர் கல்வியல் கல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சிருஷ்டி மனநல ஆலோசனை மையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், தூய மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெசி பெர்ணான்டோ, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா, ஜெயபாரதி, சுதாகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments