அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மீதி வண்டி வழங்கும் விழா பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரொசாரியோ தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் கலந்துகொண்டு பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் 54 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
உடன் நாற்றம் பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி சாமுடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திராஜா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நர்மதா நந்தகோபால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணமூர்த்தி பொருளாளர் பாபு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்மு சிவாஜி துணைத் தலைவர் சங்கர் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments