பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் செயல்படும் பொது மருத்துவம், ஆயுர்வேத, ஹோமியோபதி, குழந்தைகள் நலம் உள்ளிட்ட மருத்துவ பிரிவுகளை பார்வையிட்டு, சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் பணியில் உள்ளார்களா, மருந்து இருப்பு அறை, மருந்தகம், டெங்கு மற்றும் சிக்கன் குனியா கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, தலைமை மருத்துவர் ஆனந்தவேலு உடனிருந்தார்.
No comments