தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்.
முகாமில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆயுர் வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஐசெல்வி வழங்கினார். இதில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர்கள் லதா, லட்சுமிகாந்த், மருந்தாக்கியல் கண்காணிப்பு அலுவலர் ரூபன், மருந்தாளுநர்கள் சுப்புலட்சுமி, சாந்தி, சுமித்ரா, மருத்துவ பணியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் குளத்தூர் அருகே உள்ள பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத பிரிவு சார்பில் அங்குள்ள நல்லழகு நாடார் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் உலகளாவிய ஆயுர்வேதம் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர், மாணவியருக்கு ஆயுர் வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் பரிசு வழங்கினார். மேலும் மாணவ, மாணவியருக்கு ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியைகள் ரெஜிலா, ஜான்சிராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments