10 இடங்களில் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்கள் மற்றும் மிளிரும் ஒளி விளக்குகளை துவக்கி வைத்த இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
1. செய்யார் ரோடு (ஆற்காடு பைபாஸ்)
2. அண்ணா சிலை சந்திப்பு
3. காந்தி சிலை (பேருந்து நிலையம்)
4. ராஜேஸ்வரி திரையரங்கம் சந்திப்பு
5. முத்துக்கடை சந்திப்பு
6. SBI வங்கி சந்திப்பு (இராணிப்பேட்டை)
7. மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சந்திப்பு
8. BSNL -RDO அலுவலக சந்திப்பு
9. வாலாஜா பேருந்து நிலையம் சந்திப்பு
10. WOMENS ARTS COLLEGE சந்திப்பு (வாலாஜா)
பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்கள் (Automatic Traffic signal) மற்றும் மிளிரும் ஒளிவிளக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் (DCRB), காவல் ஆய்வாளர்கள் .சசிகுமார் (இராணிப்பேட்டை காவல் நிலையம்), சரவணன் (தகவல் தொழில்நுட்ப பிரிவு) காவல் அதிகாரிகள் மற்றும் AADWELL நிறுவனத்தின் இயக்குனர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இதுபோன்று போக்குவரத்து சீர்செய்ய பல்வேறு இடங்களில் தானியங்கி மின்விளக்குகள் மற்றும் மிளிரும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
No comments