Breaking News

சீர்காழியை அடுத்த காவிரி சங்கமத்தில் மஹாலய அமாவாசை முன்னிட்டும் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் கொடுத்து புனித நீராடினர்.

 

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கெடுக்கும் காட்சி 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடலில் காவிரி கலக்கும் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த மூன்று அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாலய அமாவாசை சிறப்பு வாய்ந்தது.அதாவது ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாலய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். மஹாலய அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பூம்புகார் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர்.

 காசிக்கு இணையான ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவெண்காடு சுவேதாண்ஸ்வரர் கோவிலில் ருத்ரபாதத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு பலிகார பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

No comments

Copying is disabled on this page!