திருநெல்வேலி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்கு அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜியின் கௌரவம் மிக்க விருது.
உலகளவில் கௌரவம் மிக்க இவ்விருதை வென்று சாதனைப் படைத்திருக்கும் பேராசிரியர் டாக்டர். லயனல் ராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வையும் மற்றும் பாராட்டு விழாவையும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இச்சிறப்பான விருதை வென்றிருக்கும் இவரது ஆராய்ச்சி பற்றி பொதுமக்களுக்கு தெரிவிப்பது மற்றும் இவரை மேலும் ஊக்குவிப்பதும் இந்நிகழ்வுகளின் நோக்கமாகும். பேராசிரியர் லயனல் ராஜ் – ன் புத்தாக்க ஆராய்ச்சிகளினால் சிறப்பான சிகிச்சை பலன்கள் சமூகத்தினருக்கு கிடைக்கப்பெற்று வரும் நிலையில் விருது வென்ற அவரது சிறப்பான ஆராய்ச்சி குறித்து பொது மக்களுக்கு தகவலளிப்பது இந்நிகழ்வுகளின் நோக்கமாகும்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி – ன் வரலாற்றில் கௌரவம் மிக்க இந்த கிராண்டு பிரைஸ் வின்னர் விருதை இருமுறை வென்றிருக்கும் ஒரே கண் மருத்துவ நிபுணர் என்ற பெருமைக்கு உரியவராக பேராசிரியர் டாக்டர். லயனல் ராஜ் அவர்கள் மட்டுமே இருக்கிறார். இதற்கு முந்தைய ஆண்டுகளில் 2018-ம் ஆண்டில் சர்வதேச கண் மருத்துவ நிபுணருக்கான கல்வி விருதையும் மற்றும் 2020-ம் ஆண்டில் சர்வதேச அறிவியலாளர் விருதையும் AAO டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்கு வழங்கியிருந்தது என்று டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்தின் இயக்க செயல்பாடுகளுக்கான துணைத்தலைவர் திரு. நந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள கண் மருத்துவர்கள் மற்றும் கண் அறுவைசிகிச்சை நிபுணர்களின் மிகப்பெரிய சங்கமாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி இயங்கி வருகிறது. யுஎஸ்ஏ முழுவதிலுமிருந்து மற்றும் உலகின் பிற நாடுகளிலிருந்தும் கண் மருத:துவ நிபுணர்கள் AAO நடத்தும் வருடாந்திர கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர். கண் மருத்துவத்தோடு தொடர்புடைய சமூகத்தினருக்கான முதன்மை நிகழ்வாக இக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. கண் மருத்துவவியலில் ஏற்பட்டுள்ள மிக சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் இந்நிகழ்வில் நிபுணர்களின் சிறப்புரைகள், கல்வி சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இவரது சிகிச்சை சேவை மீது கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காகவும் மற்றும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதற்காகவும் பேராசிரியர் லயனல் ராஜ் AAO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இவரது தனித்துவமான ஆராய்ச்சி வழிமுறைகளும் மற்றும் கண்ணின் முன்புற பிரிவின் சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணராக இவரது மருத்துவ செயல்பாடும் நோயாளிகளது பார்வைத்திறனையும், சிகிச்சை விளைவுகளையும் மற்றும் வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவி வருவதற்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இவரது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக 30 தேசிய விருதுகள் மற்றும் 32 சர்வதேச விருதுகள் உட்பட, மொத்தத்தில் 62 விருதுகளை பேராசிரியர் லயனல் ராஜ் பெற்றிருக்கிறார், டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்கு இந்த மாபெரும் பரிசை பெற்றுத் தந்திருக்கும் ஆராய்ச்சி வீடியோ குறித்து முதுநிலை மேலாளர் மருத்துவ ஆராய்ச்சி பேராசிரியர் டாக்டர். ஹீபர் ஊடகவியலாளரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். ஃபெம்டோசெகண்டு லேசர் உதவியுடன் செய்யப்படும் கண் புரைக்கான அறுவைசிகிச்சைகள் மத்தியில் ஃபெம்டோ காப்சுலோரெக்சிஸ் மருத்துவ செயல்முறைகளின்போது சாத்தியமுள்ள விழி வில்லை ஓவர் பர்ன்ஸ் என்பதை வெளிப்படுத்துகின்ற அவரது ஆராய்ச்சி செயல்திட்டத்தை இந்த வீடியோ விளக்கிக் கூறுகிறது.
கண் புரை அறுவைசிகிச்சைகளுக்காக ஃபெம்டோ செகண்டு லேசர் வழிமுறை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்மறை நேர்வுகளில் அறுவைசிகிச்சையின்போது ஏற்படும் குறுந்துளை, அறுவைசிகிச்சைக்குப் பிறகு அழற்சிகள் அல்லது அறுவைசிகிச்சைக்குப் பிறகு சப் கேப்சுலர் அழற்சி கட்டிகள், நுண்திசு நோய் கூறியியலில் கண் கலக்கம், இடைவெளி விட்டு நிகழ்கின்ற கேப்சுலர் பர்ன்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கண்புரை அறுவைசிகிச்சை நிபுணர்களால் ஃபெம்டோசெண்டு லேசரால் மேற்கொள்ளப்படும் விழிவில்லை ஓவர் பர்ன்ஸ்களின் தீவிரத்தன்மையை தரமிடல் செய்யவில்லை என்றால், தனித்துவமான சிக்கல்களை அது விளைவித்து விடும். இத்தகைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பேராசிரியர் டாக்டர் லயனல் ராஜ் அவர்களால் ஒரு தனித்துவமான சிக்கல் தரமிடல் அமைப்பு முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதுமையான தரமிடல் வழிமுறையானது, அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தாலமலஜி – ன் கவுன்சிலில் நிபுணத்துவ உறுப்பினர்களது குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது,
டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்தின் நிர்வாகம் சார்பாக, அதன் இயக்கச் செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் திரு நந்தா ஒரு நினைவுப்பரிசை பேராசிரியர் டாக்டர். D. லயனல் ராஜ் அவர்களுக்கு வழங்கினார். மேலும், திருநெல்வேலியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும், பணியாளர்களும் மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சையைப் பெற்று பலனடைந்திருக்கும் எண்ணற்ற நோயாளிகளும் தங்களது மனமார்ந்த நன்றியையும், விருது வென்றதற்காக பாராட்டையும் டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.
No comments