மூளைவாச்சடைந்தவரின் ஈமச்சடங்கிற்கு உதவித்தொகை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி இவரது மகன் வரதராஜபெருமாள் (28) இவர் ஓசூர் டாட்டா கம்பெனியில் வேலை செய்து வருகிறார் கடந்த 17ஆம் தேதி அகரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது திப்பம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வரதராஜ பெருமாள் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனையில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு தனது உறவினர்கள் வரதராஜபெருமாளின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். வரதராஜ பெருமாள் ஈமச்சடங்கு செய்வதற்காக அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவேளி இராமமூர்த்தி ரூ.5000 வழங்கினார் இதில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா, வருவாய் ஆய்வாளர் உஷா, கிராம நிர்வாக அலுவலர் சுவேந்திரன் கிராம நிர்வாக உதவியாளர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments