புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் அதிமுக மாநில இணை செயலாளர் கணேசன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி அதிமுக சார்பில் அதிமுக மாநில இணை செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான கணேசன் பிறந்த நாள் விழா சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொகுதி தலைவர் ரவி,சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலாளர் ஜானி பாய் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாநில இணை செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான கணேசன் கலந்து கொண்டு கேக் வெட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு,புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த அதிமுக தொண்டர்களூக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளம் பெண்கள் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் தீபிகாவதி,வனஜா, தொகுதி அம்மா பேரவை செயலாளர் சுகுமாரன், முரளி,மதி, மதன், சண்முகம் , சுப்பிரமணி,கோவர்தணன்,ஏழுமலை,பழனிராஜா மற்றும் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments