Breaking News

சின்னமனூர் நகராட்சியில் 50 பனைவிதைகள் நடப்பட்டது.


தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷ ஜீவனா உத்தரவின்பேரில் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் 50 பனை விதைகள் நடப்பட்டன, இந்த நிகழ்வில் நகர அமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் களப்பணியாளர் தவசிமுத்துராசா கலந்து கொண்டனர், மேலும் இன்றைய சூழலில் பனமரத்திலிருந்து பல வகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள் படையிலிருந்து ஏராளமான உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் தயாரித்து பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுக்கி கொண்டன பனையில் இருந்து பல உப உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன, இவற்றில் மனிதர்களின் உணவும் விலங்குகளின் உணவும் அடங்கும்உணவுப் பொருட்கள் மட்டுமல்லாதுகட்டடப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள்என பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!