பவானி அருகே மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் காவல்துறையினர் எனக் கூறி 25 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற 5 பேர் கும்பலை கைது செய்துள்ளனர்.
ஈரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், பவானி ராமன் ஆகியோர் பாலக்காட்டில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தனர். இவரது, மசாஜ் சென்டருக்கு 13ம் தேதி இரவு 5 பேர் கொண்ட கும்பல், போலீஸ் எனக் கூறி இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பது தொடர்பாக விசாரிக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி, பணத்தைப் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து கார்த்திக் சித்தோடு போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்தி போலீஸார், ஈரோடு, வீரப்பன்சத்திரம் வசந்தராஜ், செங்கோடம்பள்ளம் கார்த்திகேயன், லக்காபுரம் சதீஷ்குமார், சூரம்பட்டி முருகேசன், ஆனந்தகுமார் ஆகியோரைக் கைது செய்தனர்.
No comments