திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயம். 6 பக்தர்கள் காயம்.!
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கீழச் செக்காரக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள் 70 பேர் வேன் மற்றும் லோடு ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மதியம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிந்து விட்டு சுவாமி தரிசனம் முடித்து விட்டு அதே வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதில் லோடு ஆட்டோவில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்துள்ளனர்.
அவர்கள் வந்த லோடு ஆட்டோ கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்ற வாகனங்களை முந்தி சென்ற லோடு ஆட்டோ எதிரே வந்த மினி லாரியின் மீது நேராக மோதியது. இதில் லோடு ஆட்டோவில் வந்த 9 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்த சுடலை வீரன், வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் மூவரையும் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்திற்கு சென்று திரும்பிய போது லாரியும் லோடு வேனும் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் :7339011001
No comments