கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் உயிரிழந்து கிடந்த 14 மயில்கள்; விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா என விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்துள்ளன.அதே போன்று அங்குள்ள கிணறு ஒன்றில் ஐந்துக்கு மேற்பட்ட மயில்கள் உயிரிழந்து கிடந்துள்ளன. அதே போன்று ஆங்காங்கே சில மயில்கள் அரை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
14க்கும் மேற்பட்ட மைல்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் சில மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. இதனை கைப்பற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மயில்கள் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதா அல்லது விலங்குகள் கடித்து உயிரிழந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் விவசாய நிலங்களில் மக்காச்சோள பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள விதைகளை அதிகளவு மயில்கள் அதிகளவு சாப்பிட்டு இருந்தாலும் ஜீரணமாகாமல் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாகவும், இறந்து போன மயில்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு தான் மயில்கள் எப்படி இறந்தது என்பது முழுமையாக தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 14 க்கு மேற்பட்ட மயில்கள் அந்தப் பகுதியில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
No comments