வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் நீர்வழித்தடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் புதியதாக பணிகள் நிறைவுற்ற வடிகால்களின் வழியாக செல்லும் மழைநீர் கடலில் சேரும் திரேஸ்புரம் மற்றும் திருவள்ளுவர்நகர் கழிமுக பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கருத்தபாலம் பகுதியில் உள்ள ஓடையினை தூர் வாரும் பணியினையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல், வட்ட பிரதிநிதி மார்ஷல், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை திமுக பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments