திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள். கடலில் குளிக்கும் பக்தர்கள் அவதி.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9 ஆம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர்.
இதையடுத்து கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த பணியாளர்கள் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்துள்ளனர். இதில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது. இதையடுத்து அதை எடுத்து வந்த பணியாளர்கள் கடற்கரை பகுதியில் தோண்டி புதைத்தனர். மேலும் சில சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை கடலுக்குள் விட்டனர்.
இந்த ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு தோள் நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஜெல்லி மீன்களால் அரிப்பு ஏற்பட்டவர்களை உடலில் மருந்துகள் தடவி பாதுகாப்பாக குளிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments